புயல், மாதிரிப்படம்
புயல், மாதிரிப்படம்pt web

புயல் உருவாவது எப்படி... அதன் வகைகள் என்ன?

புயல் என்ற சொல்லைக் கேட்டாலே மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்படுவது இயல்பு. புயல் எவ்வாறு உருவாகிறது? எதனால் உருவாகிறது? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...
Published on

உலகில் உருவாகும் அனைத்துப் புயல்களும் வெப்பமண்டலச் சூறாவளிகள் என அழைக்கப்படுகின்றன. இவை உருவாகும் இடத்தைப் பொருத்து பெயர்கள் மாறும். உதாரணமாக, இந்தியப் பெருங்கடலில் சைக்ளோன்கள் என்றும், பசிபிக் கடலில் டைஃபூன்கள் என்றும் அட்லாண்டிக்கில் ஹரிகேன்கள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

புயல்
புயல்pt web

புயல் உருவாக, கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைந்தது 26.5 டிகிரி செல்சியஸ் அளவில், 60 மீட்டர் ஆழம் வரை இருக்க வேண்டும். கடலின் வெப்பம் அதிகரிக்கும்போது, வெப்பக் காற்று விரைவாக மேலெழும்புகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப, சுற்றுப்புறத்தில் இருந்து குளிர்ந்த ஈரப்பதமான காற்று, மையத்தை நோக்கி இழுக்கப்படுகிறது. இதனால் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகிறது. வெப்பக்காற்று தொடர்ந்து மேல் எழும்பும்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து புயல் உருவாகிறது.

மணிக்கு 30 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசினால் அது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... காற்றின் வேகம் 50 கிலோ மீட்டர் வரை அதிகரித்தால் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகும். காற்றின் வேகம் மணிக்கு 63 முதல் 88 கிமீ வரை செல்வதே புயல் என்று குறிக்கப்படுகிறது. காற்றின் வேகத்துக்கு ஏற்ப புயல்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

காற்றின் வேகம் மணிக்கு 89 கிலோ மீட்டரைத் தாண்டினால், அதற்கு தீவிரப் புயல் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 166 கிலோ மீட்டரைவிட அதிகரித்தால் அதற்கு அதி தீவிரப்புயல் என்றும் பெயர். அதிகபட்சமாக மணிக்கு 221 கிலோமீட்டர் வேகத்தில் கொடூரக் காற்று வீசினால் அது சூப்பர் புயல் என்று அழைக்கப்படுகிறது.

புயல், மாதிரிப்படம்
வட தமிழக கடற்கரையை அடைந்தது ’டிட்வா’ புயல்... நாகையில் இருந்து 60 கிமீ தொலைவில் மையம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com