டிட்வா புயல்
டிட்வா புயல்pt

வட தமிழக கடற்கரையை அடைந்தது ’டிட்வா’ புயல்... நாகையில் இருந்து 60 கிமீ தொலைவில் மையம்!

டிட்வா புயலானது வட தமிழக கடற்கரையை நெருங்கி வந்துள்ளதாகவும், நாகையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது..
Published on

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலானது, இலங்கையில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவிட்டு தமிழகத்தை நெருங்கியுள்ளது.. இலங்கையில் கிட்டத்தட்ட 40 மணிநேர பயணத்தை கடந்து வட தமிழக கடற்கரையை டிட்வா புயல் அடைந்துள்ளது..

தற்போதைய நிலவரப்படி டிட்வா புயலானது நாகையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 230 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே 160 கிலோமீட்டரில் புயல் மையம் கொண்டுள்ளது..

டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை
டிட்வா புயல் கனமழை எச்சரிக்கைweb

தற்போது டிட்வா புயலானது காற்றுமுறிவு மற்றும் வரண்ட காற்று ஊடுறுவல் காரணமாக வலுவிழக்கும் நிலையிலேயே இருந்துவருகிறது.. இருப்பினும் சென்னையை நெருங்கும்போது மேகக்கூட்டங்கள் உருவாகி கனமழை பெய்யும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது..

2 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்..

டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது, மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com