\
Tambaram Water Crisis Causes of Falling Groundwater Levels & Solutions
கோப்புபடம்Chatgpt

சென்னை புறநகரில் ஏன் இந்த தண்ணீர் தட்டுப்பாடு? தீர்வு என்ன?

சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பற்றாக்குறைக்குக் காரணம் என்ன, அதற்கான தீர்வு என்ன?
Published on: 
Summary

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறைபாடு, நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள், மழைநீர் சேகரிப்பு செயல்பாடுகள் பலவீனம் ஆகியவை சென்னை புறநகரில் நீர்மட்டம் சரிவுக்கு காரணமாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்காலிக லாரி தண்ணீரை விட, மழைநீர் சேமிப்பு, நீர்நிலைகள் மீட்பு, அரசின் திட்டங்களுடன் பொதுமக்கள் பங்களிப்பு ஆகியவை நீண்டகால தீர்வாக வலியுறுத்தப்படுகின்றன.

நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், தாம்பரம், சேலையூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போதிய அளவுக்கு தண்ணீர் கிடைக்காததால், வெளியில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு முறைக்கு 2,500 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

AI
AIகோப்புபடம்

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக அதிகரித்து வரும் குடியிருப்புகளால் தண்ணீருக்கான தேவையும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. மறுபுறம், மாநகரப் பகுதிகளைப் போன்று விரிவான குடிநீர் கட்டமைப்பு இல்லாததால், நிலத்தடி நீரை அதிக அளவில் சார்ந்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது. மேலும், கான்கிரீட் பரப்புகள் அதிகரிப்பு, மழைநீர் நிலத்துக்குள் செல்வது தடுக்கப்படுவது உள்ளிட்ட காரணிகளும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

Tambaram Water Crisis Causes of Falling Groundwater Levels & Solutions
சிக்கிமில் கனமழையால் நிலச்சரிவு.. உடைந்துருகும் பனிப்பாறைகளால் ஆபத்து!

இதுமட்டுமல்லாமல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் முறையாகப் பாதுகாக்கப்படாததும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு முக்கியக் காரணம் என நீரியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தண்ணீர் லாரிகள் மூலம் தற்காலிகத் தீர்வு காண்பதைவிட, மழைநீரை சேமித்து நிலத்தடிக்குள் செலுத்துதல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வழித்தடங்களை மீட்டெடுத்தல், மழைநீர் சேகரிப்பை முழுமையாக செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இனி வரும் காலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க, அரசின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியமாகிறது.

Tambaram Water Crisis Causes of Falling Groundwater Levels & Solutions
புதிய ஏவுகணையை வீசிய ஈரான்.. ஹார்முஸில் பின்வாங்கிய அமெரிக்க கடற்படை?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com