\
sikkim flood and landslide
sikkim flood and landslidepti

சிக்கிமில் கனமழையால் நிலச்சரிவு.. உடைந்துருகும் பனிப்பாறைகளால் ஆபத்து!

சிக்கிம் மாநில ரிம்பி கிராமத்தில் தொடர்ச்சியான கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, சேறு மற்றும் பாறைக் கழிவுகள் அதிவேகமாக கிராமத்தை நோக்கி பாயும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
Published on: 
Summary

சிக்கிம் மாநில ரிம்பி கிராமத்தில் தொடர்ச்சியான கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, சேறு மற்றும் பாறைக் கழிவுகள் அதிவேகமாக கிராமத்தை நோக்கி பாயும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பல வீடுகள் சேதமடைந்து சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இமயமலைப் பகுதியில் பனிப்பாறை ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்து சூழலியல் வல்லுநர்கள் கடும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சிக்கிம் மாநிலம் ரிம்பி கிராமத்தில் மலையிலிருந்து கட்டுக்கடங்காத சேறு, மண் மற்றும் பாறைக் கழிவுகள் கிராமத்தை நோக்கி அதிவேகமாகப் பாய்ந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

pti

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மண்ணும் கழிவுகளும் அடித்துக்கொண்டுவந்ததை நினைவூட்டும் வகையில் சிக்கிம் நிலச்சரிவு காட்சிகள் அமைந்துள்ளன. 1300க்கு மேற்பட்டோர் உயிரைப் பறித்த நேபாளப் பேரிடருக்கு இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவே முதன்மையான காரணம். சிக்கிமிலும் 40 பனிப்பாறை ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படும் அபாயத்தில் உள்ளதாகவும், அதில் 16 ஏரிகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

-pti

சுற்றுச்சூழல்ரீதியில் முக்கியத்துவம்வாய்ந்த தீஸ்தா ஆற்றுப் படுகையில் அமைக்கப்பட்டு வரும் 30க்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்களுக்காக மலைகளை வெடிவைத்துத் தோண்டுவது, நில அமைப்பைப் பலவீனப்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2023இல் லோனக் பனிப்பாறை ஏரி உடைந்தபோது தீஸ்தா-மூன்றாம் அணை முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்வு, இத்தகைய நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தின் வீரியத்தைப் பலமடங்கு கூட்டி அழிவை உண்டாக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளதாக சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

sikkim flood and landslide
இயற்கைச் சீற்றங்களால் அழியும் 22 மொழிகளின் பாரம்பரியம்.. மறைந்துவரும் ‘புரட்டாசி மழை' சொல் பயன்பாடு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com