‘ஒரு லிட்டர் Water Bottle-ல் சுமார் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகள்’ - கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு!

“ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சராசரியாக சுமார் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகள் இருக்கலாம்” - கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளார்கள்
தண்ணீர் பாட்டில்கள்
தண்ணீர் பாட்டில்கள்PT

ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சராசரியாக சுமார் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகள் இருக்கலாம் என்றும், இது முந்தைய ஆராய்ச்சியின் மதிப்பீடுகளை விட 10 முதல் 100 மடங்கு அதிகம் என்றும் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கின்றனர்.

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஒரு மைக்ரோமீட்டரில் இருந்து (ஒரு மீட்டரில் ஒரு மில்லியனில் ஒரு பங்கு) 5 மில்லிமீட்டர் வரை இருக்கும் போது, நானோபிளாஸ்டிக்கானது ஒரு மைக்ரோமீட்டரை விட சிறியது.

கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்காவில் விற்கப்படும் மூன்று பிரபலமான பாட்டில்களில் அடைக்கப்பட்ட நீரை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ‘ஒவ்வொரு லிட்டரிலும் சுமார் 3.7 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகள் 90 சதவிகிதம் இருந்தது மீதமுள்ள 10 சதவிகிதம் 'மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்’ என அவர்கள் கண்டறிந்தனர். அவர்களின் கண்டுபிடிப்புகள் தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

"முன்பு இது ஒரு இருண்ட பகுதி. குறிப்பிடப்படாதது. நச்சுத்தன்மை ஆய்வுகள் அங்கு என்ன இருக்கிறது என்று யூகித்துக்கொண்டிருந்தன" என்று கொலம்பியா காலநிலை பள்ளியின் லாமண்ட்-டோஹெர்டி எர்த் அப்சர்வேட்டரியின் சுற்றுச்சூழல் வேதியியலாளரான ஆய்வு இணை ஆசிரியர் பெய்சான் யான் கூறினார்.

சமீப காலங்களில் மைக்ரோ-பிளாஸ்டிக்ஸ் மண், குடிநீர், உணவு மற்றும் துருவப் பனியில் கூட இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நாம் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பெரிய பிளாஸ்டிக்குகள் படிப்படியாக சிறிய பிட்களாக உடையும்போது இவை உருவாகும். கண்களுக்கு புலப்படாத இத்தகைய பிளாஸ்டிக்குகள் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்குள் நுழைகின்றன, அவற்றின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் சாத்தியமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இந்த ஆய்வில் அவர்கள் பொதுவான மற்றுமொரு விஷயத்தையும் கண்டறிந்தனர். அதன்படி “பாலி எதிலீன் டெரெப்தாலேட்” தண்ணீர் பாட்டில்கள் இந்த பொருள் தயாரிக்கப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மற்றொரு வகை பிளாஸ்டிக் பாலிமைடு. இது ஒரு வகை நைலான். இவை தண்ணீர் பாட்டிலாக மாறுவதற்கு முன் சுத்திகரிக்கப்பட வேண்டிய பிளாஸ்டிக் இழைகளில் இருந்து வந்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

தண்ணீர் பாட்டில்கள்
”முதலில் இந்த இடங்களை சுற்றிப் பார்க்கணும்” - சாக்‌ஷி உடனான டிராவல் பிளான் குறித்து தோனி!

அவர்கள் கண்டறிந்த பிற பொதுவான பிளாஸ்டிக்குகள் பாலிஸ்டிரீன், பாலிவினைல் குளோரைடு மற்றும் பாலிமெத்தில் மெதக்ரிலேட் -- இவை அனைத்தும் பல்வேறு தொழில்துறை செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் தேடிய ஏழு பிளாஸ்டிக் வகைகளில் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் மாதிரிகளில் நானோ துகள்களிலும் சுமார் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ளவை என்னவென்று தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com