Life Could Survive in Toxic Mars Conditions, Say Scientists
MarsPt web

”செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்” - விஞ்ஞானிகளின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு!

செவ்வாய் கிரகத்தின் அதீத நச்சுச் சூழலிலும் உயிரினங்கள் வாழ முடியும் என்ற வியக்கத்தக்க உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Published on

செவ்வாய் கிரகம் என்பது உயிர்வாழத் தகுதியற்ற, கடும் குளிரும், காஸ்மிக் கதிர்வீச்சும் கொண்ட ஒரு கிரகமாகவே நீண்டகாலமாகக் கருதப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் அந்த எண்ணத்தை மாற்றியமைத்துள்ளன. செவ்வாய் கிரகத்தில் நிலவும் விண்கல் மோதல்களால் ஏற்படும் அதிர்வலைகள் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட மண் ஆகியவற்றை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி விஞ்ஞானிகள் சோதனை நடத்தினர். இதில் சில நுண்ணுயிரிகள் அந்த மிகக் கடுமையான சூழலையும் தாங்கி உயிர் பிழைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Mars
MarsX

'PNAS Nexus' இதழில் வெளியான ஆய்வின்படி, செவ்வாய் கிரகத்தின் இரண்டு முக்கிய ஆபத்துகளான விண்கல் மோதல் அதிர்வலைகள் மற்றும் அங்குள்ள நச்சுத்தன்மை வாய்ந்த பெர்குளோரேட் உப்புகளை ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கினர். இவ்வளவு ஆபத்தான சூழலிலும், எளிய 'ஈஸ்ட்' செல்கள் உயிர் பிழைத்ததைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தனர். இந்த நுண்ணுயிரிகள் தங்களைக் காத்துக்கொள்ள ஒரு 'மூலக்கூறு கவசத்தை' உருவாக்குகின்றன. இந்த கவசங்கள் உயிரணுக்களின் முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கின்றன. இது தவிர, ஆக்சிஜன் இல்லாத சூழல் மற்றும் அதிக கதிர்வீச்சு இருக்கும் இடங்களிலும் சில பாக்டீரியாக்கள் உயிர் பிழைக்கின்றன. இவை தங்கள் உடல் அமைப்பை மாற்றிக்கொள்வதன் மூலமோ அல்லது செயலற்ற நிலைக்கு செல்வதன் மூலமோ தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன.

Life Could Survive in Toxic Mars Conditions, Say Scientists
'ஏஐ தொழில்நுட்பத்திற்கு KILL SWITCH அவசியம்..' டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!

எளிய செல்கள் இவ்வளவு கடுமையான சூழலைத் தாங்குமானால், செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகள் இருப்பதற்கான அல்லது ஒரு காலத்தில் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இது வேற்று கிரகங்களில் உயிரினங்களைத் தேடும் முயற்சிக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. வாழ்வதற்கு வசதியான சூழல் மட்டுமே வேண்டும் என்பதில்லை, மாற்றங்களுக்கு ஏற்ப வளையும் தன்மையே உயிர் பிழைக்க அவசியம் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் செழித்து வளர முடியாவிட்டாலும், நாம் நினைத்ததை விட "உயிர்" என்பது மிகவும் வலிமையானது என்பதை இந்தச் சோதனை நிரூபித்துள்ளது.

Life Could Survive in Toxic Mars Conditions, Say Scientists
எரிபொருள் பற்றாக்குறை | விமானங்களுக்குப் பாதிப்பு.. ஐரோப்பாவுக்கு பெரிய சிக்கல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com