\
India's New Animal Testing Rules Raise Welfare Concerns
விலங்கு பரிசோதனைAI

விலங்கு பரிசோதனை விதிகளில் புதிய தளர்வுகள்.. விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு!

இந்தியாவில் விலங்குகள் மீதான பரிசோதனைகளை முறைப்படுத்த மத்திய அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on: 

இந்தியாவில் விலங்குகள் மீதான பரிசோதனைகளை முறைப்படுத்த மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிகள், விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 1998ஆம் ஆண்டு இருந்த பழைய விதிகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின்படி, சிறிய அளவிலான விலங்குகள் மீதான பரிசோதனைகளுக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை. அந்தந்த ஆராய்ச்சி நிறுவனங்களே நேரடியாக அனுமதி வழங்கிக்கொள்ளலாம் எனத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

AI

ஆய்வகங்களுக்குத் தேவையான கால்நடைகள், பறவைகள் மற்றும் மீன்களைப் பதிவு செய்யப்படாத இடங்களில் இருந்தோ அல்லது திறந்த சந்தைகளில் இருந்தோ வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவசரத் தேவைகளுக்கு தெருவிலங்குகளையும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வனவிலங்குகளையும்கூட பரிசோதனைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறி உள்ளது. கல்வி மற்றும் பயிற்சிக்கு, இந்த விலங்குகளை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பரிசோதனை செய்யும் நிறுவனமே தனக்குத்தானே அனுமதி வழங்குவது தவறு என்றும், இதனால் விலங்குகள் மீது அதிகளவில் கொடுமைகள் நடக்க வாய்ப்புள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உலகம் முழுவதும் விலங்குகளுக்குப் பதிலாக நவீன முறைகளைப் பயன்படுத்திவரும் நிலையில், இந்தியாவின் இந்த புதிய விதிகள் விலங்கு பாதுகாப்பை மிகவும் பின்னோக்கி அழைத்துச் செல்வதாக PETA போன்ற அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

India's New Animal Testing Rules Raise Welfare Concerns
தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் அதிகரிக்கும் பக்கவாத நோய் பாதிப்புகள்.. காரணம் என்ன?