\
World Stroke Day
World Stroke Daypt web

தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் அதிகரிக்கும் பக்கவாத நோய் பாதிப்புகள்.. காரணம் என்ன?

தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே பக்கவாத நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. உலக பக்கவாத விழிப்புணர்வு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பார்க்கலாம்
Published on: 

தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே பக்கவாத நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. உலக பக்கவாத விழிப்புணர்வு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பார்க்கலாம்

தமிழ்நாட்டில் யங் ஸ்ட்ரோக் எனப்படும் இளைஞர்களுக்கான பக்கவாத பாதிப்பு அண்மைக்காலமாக மிகவும் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களைப் பெருமளவில் தாக்கும் இந்த பாதிப்பிற்குப் பின்னால் சீரற்ற வாழ்க்கை முறை, துரித உணவுகள், மன அழுத்தம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தூக்கமின்மை ஆகியவை முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, கடந்த 2019இல் 19 ஆயிரத்து 167ஆக இருந்த பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை 2024இல் 32 ஆயிரத்து 802 என பெருமளவில் உயர்ந்துள்ளது. இதில் ரத்த ஓட்டம் தடைபட்டு ஏற்படும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் பாதிப்பே 90 சதவீதம் வரை உள்ளது. பக்கவாதம் தாக்கியவர்கள் 'கோல்டன் பீரியட்' எனப்படும் முதல் நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றால், ரத்தக் கட்டியைக் கரைக்கும் 'த்ராம்போலிசிஸ்' சிகிச்சை மூலம் முழுமையாகக் குணமடைய முடியும். BE FAST என்ற மருத்துவக் குறிப்பு வார்தைகளைக்கொண்டு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்கள் ஏற்படுத்துகின்றனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்ற அரசு மருத்துவமனைகளில், SCRIPT என்ற சிறப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் வரும் பக்கவாதத்திற்குத் தேவையான 'மெக்கானிக்கல் த்ராம்பக்டமி' உள்ளிட்ட அதிநவீன உயிர்காக்கும் சிகிச்சைகள், 24 மணி நேரமும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், தூங்கி எழும்போதே சிலருக்கு ஏற்படும் 'வேக்-அப் ஸ்ட்ரோக்' பாதிப்புகளையும், நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிந்து உரிய சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்ற முடிகிறது.

முறையான உடற்பயிற்சி,
ஆரோக்கியமான உணவுமுறை, புகை
மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்த்தல்
ஆகியவற்றின் மூலம் பக்கவாதம்
வராமல் நம்மை முழுமையாகப்
பாதுகாத்துக்கொள்ள முடியும்.