\
Dogs Can Detect Human Emotions, Study Finds
Human EmotionAI

மனித உணர்ச்சிகளை நாய்கள் எவ்வாறு உணர்கின்றன?: புதிய ஆய்வு

எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் நாய்களின் மூளைப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டதில், பயம், கோபம், சோகம் ஆகியவற்றை பார்க்கும் போது வெவ்வேறு பகுதிகள் செயல்படுகின்றன; குறிப்பாக பய உணர்வை நாய்கள் மிக வேகமாகக் கண்டறிகின்றன.
Published on

நமது கோபம், அழுகை மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளை நாய்கள் எளிதில் புரிந்துகொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களின் வெவ்வேறு எதிர்மறை முகபாவனைகளை நாய்கள் எவ்வாறு வேறுபடுத்தி அறிகின்றன என்பதை ஐசயன்ஸ் இதழில் வெளியான புதிய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியுள்ளது. நாய்களின் மூளையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மனிதர்களின் பயம், கோபம் மற்றும் சோகம் ஆகியவற்றைப் பார்க்கும்போது நாய்களின் மூளையில் வெவ்வேறு பகுதிகள் தூண்டப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

Dog
DogWeb

குறிப்பாக, கோபம் மற்றும் சோகத்தைவிட மனிதர்களின் 'பய உணர்வை' நாய்கள் மிக விரைவாகக் கண்டறிகின்றன. பயமும் கோபமும் தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நாய்கள் அவற்றுக்கு உடனடியாக எதிர்வினையாற்றுகின்றன. அதேநேரம், சோகம் உடனடியாக எந்த ஆபத்தையும் தராது என்பதால் நாய்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. வெறும் நல்ல உணர்வு, கெட்ட உணர்வு என்று பிரித்துப் பார்க்காமல், மனிதர்களின் வெவ்வேறு உணர்ச்சிகளை நாய்களின் மூளை மிகத் துல்லியமாகப் பகுத்தாய்கிறது என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

Dogs Can Detect Human Emotions, Study Finds
எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு.. பெண்களுக்கு நீரிழிவு அபாயம்.. ஆய்வில் தகவல்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com