\
Are All Animals That Attack Humans Man-Eaters?
சிறுத்தைPT

மனிதர்களைத் தாக்குபவை ஆட்கொல்லி விலங்குகளா? சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுவது என்ன?

மனிதர்களை தொடர்ந்து வேட்டையாடும் பழக்கமுள்ள விலங்குகளே உண்மையான ஆட்கொல்லிகள்; ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.
Published on

வனவிலங்குகளின் தாக்குதல்களால் மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகின்றன. ஆனால், மனிதர்களைத் தாக்குபவை எல்லாமே 'ஆட்கொல்லி' விலங்குகளா? சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுவது என்ன?

வனவிலங்குகள் மீது தாக்குதல் நடத்தும்போதோ, தற்காப்புக்காகவோ, தனது குட்டிகளைப் பாதுகாக்கும்போதோ அல்லது மனிதர்களின் ஆக்கிரமிப்பால் ஏற்படும் மோதல்களிலோதான் பெரும்பாலும் மனிதர்களைத் தாக்குகின்றன.

விலங்குகள்
விலங்குகள்Freepik

ஆனால், இதுபோன்று மனிதர்கள் தாக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்தையும் 'ஆட்கொல்லி' என்று முத்திரைக் குத்தமுடியாது என்கின்றனர் நிபுணர்கள். வனவிலங்கு புகைப்படக் கலைஞர் இந்திரஜித் கார்படேவின் கூற்றுப்படி, மனிதர்களைத் தொடர்ந்து வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டவை மட்டுமே உண்மையான ஆட்கொல்லிகள். காயம், நோய் அல்லது இயற்கையான இரைகள் கிடைக்காத சூழலில்தான் மனிதர்களை நோக்கி விலங்குகள் தள்ளப்படுகின்றன.

ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, விலங்குகளை உடனே கொல்வது தீர்வு அல்ல. மனித-விலங்கு மோதல்களுக்குப் பின் உள்ள உண்மையான காரணங்களைப் புரிந்துகொள்வதே இதற்கு சரியான தீர்வாகும்.

Are All Animals That Attack Humans Man-Eaters?
14 இடங்களில் மேகவெடிப்பு.. சரிந்த இமயமலை பகுதிகள்.. சின்னாபின்னமான ஜம்மு காஷ்மீர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com