வானில் இயற்கையின் லைட் ஷோ! இந்த வாரம் காத்திருக்கும் அதிசயம்! விண்வெளியின் Double Treat!
அமெரிக்க விண்கல் சங்கம் கூறியதன்படி ஆல்பா கேப்ரிகார்னிட்ஸ் மற்றும் சதர்ன் டெல்டா அக்வாரிட்ஸ் விண்கல் மழைகள் வியாழன் இரவு முதல் வெள்ளி அதிகாலை வரை உச்சத்தை எட்டும். முழு நிலவின் அதிக வெளிச்சம் காரணமாக மங்கலான விண்கற்கள் தெளிவாகத் தெரியாமல் போகலாம். நகர ஒளியிலிருந்து விலகி இருண்ட திறந்தவெளியில் நிலவை பின்புறமாக வைத்து பார்ப்பது சிறந்த அனுபவத்தை தரும்.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
அமெரிக்க விண்கல் சங்கத்தின் தகவலின்படி, ஆல்பா கேப்ரிகார்னிட்ஸ் (Alpha Capricornids) மற்றும் சதர்ன் டெல்டா அக்வாரிட்ஸ் (Southern Delta Aquariids) விண்கல் மழைகள் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை உச்சத்தை எட்டும். ஆனால், முழு நிலவின் அதிக வெளிச்சம் மங்கலான விண்கற்கள் தெரிவதை குறைக்கும் என்பதால், இந்த அரிய காட்சியை முழுமையாக ரசிப்பது கடினமாக இருக்கலாம். தெற்கு அரைக்கோளப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு பார்வை வாய்ப்பு சற்று அதிகமாக இருக்கும்.
நகரங்களின் ஒளி மாசுபாட்டிலிருந்து விலகி, இருள் சூழ்ந்த திறந்தவெளிப் பகுதிகளில் இருந்து, நிலவை பின்புறமாக வைத்து வானத்தை நோக்கிப் பார்ப்பது சிறந்த அனுபவத்தை வழங்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தில் உச்சத்தை அடையும் பெர்சீட்ஸ் (Perseids) விண்கல் மழை இந்த ஆண்டின் மிகவும் பிரமாண்டமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்கல் சங்கத்தின் தகவலின்படி, 2026ஆம் ஆண்டில் பெர்சீட்ஸ் ஆகஸ்ட் 12–13 தேதிகளில் உச்சத்தை எட்டும்.
விண்கல் மழைகள் கண்கவர் வானியல் நிகழ்வுகள் மட்டுமல்ல; விண்வெளியில் சுற்றும் துகள்கள் மற்றும் எதிர்கால விண்வெளிப் பயணங்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்கும் முக்கியமான தகவல்களை வழங்குகின்றன. இருண்ட திறந்தவெளிப் பகுதிகளில், நகர ஒளியிலிருந்து விலகி வானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் விண்கல் மழையை தெளிவாகக் காணலாம்.

