புதிய தலைமுறை செய்தி எதிரொலி: பழங்குடியின மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கிய எம்.பி. கனிமொழி

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: பழங்குடியின மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கிய எம்.பி. கனிமொழி
புதிய தலைமுறை செய்தி எதிரொலி: பழங்குடியின மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கிய எம்.பி. கனிமொழி

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, சாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவித்து வந்த தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த பழங்குடியின மாணவி விஜயலட்சுமிக்கு, திமுக எம்.பி கனிமொழி உதவி கரம் நீட்டியுள்ளார். 

சாதி சான்றிதழ் கிடைக்காததால் என்னால் கல்லூரியில் சேர முடியவில்லை என புதிய தலைமுறையில் பேட்டியளித்திருந்தார் மாணவி விஜயலட்சுமி. நேற்று வெளியாகியிருந்த இந்த செய்தியை கண்ட தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி. கனிமொழி, மாணவி விஜயலட்சுமி மற்றும் அவரது பெற்றோரிடம் இன்று அலைபேசியில் பேசி விசாரித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ஆலடி அருணாவின் மகன் எழில்வாணனுக்கு சொந்தமான ஐன்ஸ்டீன் கல்லூரியில் எந்த ஒரு கட்டணமும் இன்றி மாணவி கல்லூரி படிப்பை தொடங்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஒரு மாதத்திற்குள் சாதிச்சான்றிதழ் கிடைக்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F174973471380812%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe> 

இந்த தகவலை மாணவி விஜயலட்சுமியின் தந்தை சங்கர் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார். தன் கல்லூரிக் கனவை நனவாக்கிய எம்.பி. கனிமொழிக்கு தொலைபேசியிலேயே நன்றி தெரிவித்தார்.

- நெல்லை நாகராஜன் மற்றும் சுந்தரமகேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com