நீட் நுழைவுத்தேர்வு
நீட் நுழைவுத்தேர்வுமுகநூல்

ஆன்லைனில் நடத்தப்படுமா நீட் நுழைவுத்தேர்வு? மத்திய கல்வி அமைச்சர் சொல்வதென்ன?

நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Published on

நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவில் எங்களின் அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறோம். தேசியத் தேர்வு முகமை அடுத்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும். காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளை நடத்தாது.

நீட் நுழைவுத்தேர்வு
சிவகங்கை: உயர்தர கற்றல் வகுப்புகளுடன் கவனம் ஈர்க்கும் கருவியப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி!

அதேநேரம் இளங்கலை நீட் நுழைவுத் தேர்வை காகிதம் மற்றும் பேனா அடிப்படையில் நடத்துவதா? அல்லது ஆன்லைனில் நடத்துவதா என்பது குறித்து சுகாதார அமைச்சகத்துடன் ஆலோசித்து வருகிறோம்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com