திருட வந்தவரை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள்

திருட வந்தவரை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள்
திருட வந்தவரை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள்

திருச்சி அருகே மர அறுவை மில்லில் திருட வந்த மர்மநபரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அம்பேத்கர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஆஷா புரா மர அறுவை மற்றும் விற்பனை கடையில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் நுழைந்து, அங்கிருந்த மேலாளர் தரேந்தரின் செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் சத்தமிடவே மர்ம நபர் தப்பித்து சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது. மீண்டும் அதே நபர் இரவு சுவர் ஏறி குதித்து அரவை மில்லில் பணியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களிடம் பணத்தை பறிக்க முயற்சித்த போது அவரை பிடித்து கடுமையாக தாக்கி மரத்தில் கட்டி வைத்துள்ளனர். இதில் திருட வந்த மர்ம நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு போராடிய நிலையில் இன்று அதிகாலை இறந்துள்ளார்.

அதிகாலை அவர் இறந்த நிலையில் மேலாளர் நரேந்தர், மணிகண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீசார் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நால்வரை (ஃபைசல் உக்,ரசூல் ரகுமான், ஷேக், முசிபுல் யுக்) பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com