வேலூர் | பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை - கல்லூரி துணை முதல்வருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூரில் உள்ள தனியால் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன். இவர் அதே கல்லூரியில் பணியாற்றி வரும் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட் பெண் கௌரவ விரிவுரையாளர் வேலூர் எஸ்பி மதிவாணனிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதாவிற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் கடந்த 18-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி துணை முதல்வர் அன்பழகனை நேற்று ஆந்திர மாநிலத்தில் வைத்து கைது செய்து வேலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பின் இன்று வேலூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், கல்லூரி துணை முதல்வர் அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுதது வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.