முதியவர் போக்சோவில் கைதுpt desk
குற்றம்
கோவை | சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் போக்சோவில் கைது
மேட்டுப்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 65 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
செய்தியாளர்: இரா.சரவணபாபு
மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (65)..கூலி வேலை பார்த்து வரும் இவர், நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
Arrestedpt desk
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.. புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவர் மணியை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.