வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி 1 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபர்.. மக்களே உஷார்..!

வீடு வாடகைக்கு வேண்டும் என்று அட்வான்ஸ் கொடுப்பதற்காக Gpay நம்பரை வாங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
ஏமாற்றிய நபர்
ஏமாற்றிய நபர்புதியதலைமுறை

எக்ஸ் வலைதளத்தில் Aratj என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கும் நபர் போட்ட பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, “எங்களுடைய வீடு வாடகைக்கு விடப்படும் என்பதை தனியார் வெப்சைட் மூலமாக விளம்பரம் கொடுத்திருந்தோம். இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 17ம் தேதி சிவ சங்கர திவாரி என்ற பெயரில், இந்திய விமானப்படையில் வேலை செய்வதாகவும், சென்னை தாம்பரத்திற்கு மாற்றலாகி வருவதால் தனக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று என்னுடைய மாமனாருக்கு ஒருவர் அழைத்து பேசியுள்ளார். மேலும், வீட்டிற்கு உடனடியாக மாற வேண்டும். நேரில் வந்து வீட்டை பார்க்க இயலாது என்று சொல்லி, 74 வயதான எனது மாமனாரிடம் பேசி தான் சம்மந்தமான ஆவணங்களை அனுப்பினார்.

மேலும், என் மாமனாரிடம் வீட்டுக்கு Advance பணம் அனுப்புகிறேன். GPAY Account number வேண்டும் என்று சொல்லி வாங்கி இருக்கிறான். Account number தொடர்பான தகவல்களை வைத்து எனது மாமனாருடைய GPAY Accountல் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை scamming மூலமாக லாகவமாக எடுத்து விட்டான். அதன் பின்பு பலமுறை தொலைபேசியில் அழைத்தும் எங்களுடைய அழைப்பை அவன் எடுக்கவில்லை.

ஏமாற்றிய நபர்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் விபரீத முடிவு... கொலையா? தற்கொலையா?

இது போன்று வயதானவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கயவர்களை பிடிக்கவும், முறைகேடுகளை தடுக்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தான் விமானப்படையில் வேலை செய்வதாக சொல்லிய அந்த நபர், அதற்கான ID கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை அனுப்பியுள்ளார். அவருடன் பேசிய தொலைபேசி எண்களையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார், பணத்தை இழந்தவரின் மருமகன்.

ஏமாற்றிய நபர்
கேக் சாப்பிட்ட பஞ்சாப் சிறுமி உயிரிழந்த விவகாரம் - கேக்கில் இருந்தது என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இதுபோன்ற மோசடிகள் சமீபகாலமான அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “இதுபோன்ற மோசடிகள் கடந்த 2021ம் ஆண்டு முதல் அடிக்கடி நடந்து வருகிறது. இதுவரை பல நூறு சம்பவங்கள் நடந்துள்ளன. ராணுவம், விமானப்படை, கப்பற்படை போன்றவற்றில் வேலை செய்வதாக சிலர் அழைத்துப் பேசுவார்கள். வீடு வேண்டும் என்று கூறிவிட்டு, நீங்கள் என்ன விலைக்கு விளம்பரம் செய்திருந்தீர்களோ, அதனை தட்டாமல் தருவதாக பேசுவார்கள். உடனடியாக மாற வேண்டும். நேரில் வர முடியவில்லை. அவசரம் என்றெல்லாம் கூறி உங்களை சற்று பதற்றத்துடனே வைத்திருப்பார்கள். அத்தோடு, உங்களிடம் விவரங்களை கேட்டறிவார்கள். Gpay நம்பர் அல்லது அக்கவுண்ட் நம்பரை வாங்கிக்கொண்டு அதில் இருந்து பணத்தை மோசடி செய்வார்கள். சொன்ன பணத்தை உடனடியாக கொடுக்கிறேன். நேரில் வர முடியாது. உங்களது வங்கி கணக்குகளை தாருங்கள் என்று கேட்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டால், நேரில் வந்து பார்க்கும்படி சொல்லுங்கள். அவர்களது ஆவணங்களை ஒருமுறை பரிசீலனை செய்யுங்கள்.

Karthikeyan.N Cyber Crime Advocate & Cyber Law Expert
Karthikeyan.N Cyber Crime Advocate & Cyber Law Expert

சிலர், பணம் அனுப்புவதாக 1 லட்சத்திற்கு பதில் 10 லட்சம் ரூபாயை அனுப்பிவிட்டேன். அரசு பணம், உங்கள் மீதுதான் புகார் எழும், சிக்கலில் மாட்டுவீர்கள். தவறுதலாக அனுப்பிய 9 லட்சத்தை திரும்ப அனுப்புங்கள் என்று கேட்பார்கள். அதற்கு 10 நிமிடங்கள் கெடுவும் வைப்பார்கள். அவர்கள் பணம் அனுப்பியதுபோலவே ஸ்கிரீன் ஷாட் மற்றும் மெசேஜையும் போலியாக அனுப்புவார்கள். அதனை நம்பி பதற்றத்தில் பணத்தை அனுப்ப வேண்டாம். ஒருசிலர் இதுபோல பணத்தை இழந்துள்ளனர். அதனால், கவனமாக இருங்கள். யாருடனும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com