ஒசூர்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 சவரன் தங்கச் செயின் பறிப்பு; 2 பேர் கைது

ஒசூரில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவர்
கைது செய்யப்பட்ட இருவர்pt desk

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஓம் சாந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சாரதா பாய் (70). இவர் தனது வீட்டில் கறவை மாடுகளை வளர்ப்பதோடு பால் வியாபாரமும் செய்து வருகிறார். இதனிடையே, இவரது வீட்டில் இளைஞர் ஒருவர் தினமும் பால் வாங்கிச் சென்றுள்ளார். இன்று வழக்கம்போல அவரது வீட்டுக்கு பால் வாங்கச் சென்ற இளைஞர், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

arrest
arrestpt desk
கைது செய்யப்பட்ட இருவர்
செங்கல்பட்டு: பெட்ரோல் நிலையத்தில் ரூ.83,000 கொள்ளை; வெளிநாட்டு கொள்ளையர்கள் கைவரிசை

இந்த திருட்டு சம்பவம் குறித்து மூதாட்டி சாரதா பாய், ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஒசூர் முக்கால் சென்ட் பகுதியைக் சேர்ந்த யஸ்வந்த் (21) மற்றும் ஒசூர் பழைய ஏஎஸ்டிசி அட்கோ பகுதியைக் சேர்ந்த அலெக்ஸ் (24) ஆகிய இருவரும் சேர்ந்து மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் இருந்த இடத்தை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com