சென்னை: வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை - இருவர் கைதுpt desk
குற்றம்
சென்னை: வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை - இருவர் கைது... 655 மது பாட்டில்கள் பறிமுதல்
வெளிநாட்டு மதுபானங்களை மறைத்துவைத்து விற்பனை செய்ததாக இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 655 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை பூக்கடை பர்மா பஜாரில் சிலர் வெளிநாட்டு மதுபானங்களை மறைத்துவைத்து விற்பனை செய்வதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்குப் பிரிவு போலீசார், பூக்கடை முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.
Liquor Bottles seizedpt desk
அப்போது சுமார் ஐந்து கடைகளில் இருந்து 655 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த நாகநாதன் மற்றும் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கல்யாணராமன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாயை அடித்து கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகி கைது; ஆத்திரம் தாங்க முடியாமல் அடித்ததாக வாக்குமூலம்!