நாயை அடித்து கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகி கைது; ஆத்திரம் தாங்க முடியாமல் அடித்ததாக வாக்குமூலம்!

வேடசந்தூரில் குழந்தைகளைத் துரத்திக் கடிக்க வந்த நாயை அடித்துக் கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
இந்து முன்னணி நிர்வாகி  ஈஸ்வரன்
இந்து முன்னணி நிர்வாகி ஈஸ்வரன்PT WEB

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வடமதுரை பால்கனிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் இந்து முன்னணி கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாண்டியம்மாள் என்பவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடந்து சொல்லும் போதெல்லாம் அவரையும் அவரது குழந்தைகளையும் விரட்டி விரட்டி கடிக்க வந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த நாய்
உயிரிழந்த நாய்

இந்தநிலையில், நாய் மீது ஆத்திரமடைந்த ஈஸ்வரன் தனது நண்பருடன் சேர்ந்து நேற்று நாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து அருகே உள்ள குளத்தில் வீசி சென்றுள்ளார்.

இந்து முன்னணி நிர்வாகி  ஈஸ்வரன்
பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியமா?

இதுகுறித்து நாயின் உரிமையாளர் பாண்டியம்மாள் வடமதுரை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.

இதற்கிடையில் நாயின் உடலை மீட்டு கால்நடை மருத்துவரைக் கொண்டு பிரேதப்பரிசோதனை செய்து, நாயின் உடலை அடக்கம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com