அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைதுpt desk

திருப்பூர் | பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

காங்கேயம் அருகே அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Published on

செய்தியாளர்: சுரேஷ் குமார்

காங்கேயம் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சிவகுமார் (54). இவர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

கைது
கைதுகோப்புப்படம்

இதுகுறித்து உறவினர் காவல்துறை கட்டுப்பாட்டு அறை புகார் எண் 100க்கு புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊதியூர் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
ஆம்பூர் | ”கந்து வட்டிக் கொடுமை தாங்க முடியல” கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு

விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com