\
இரு வங்கதேச இளைஞர்கள் கைது
இரு வங்கதேச இளைஞர்கள் கைதுpt desk

திருப்பூர் | சட்ட விரோதமாக தங்கியிருந்த இரு வங்கதேச இளைஞர்கள் கைது

திருப்பூரில் முறைகேடாக தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இரு வங்கதேச இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஹாலித் ராஜா

திருப்பூர் கருப்பகவுண்டம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வங்கதேச இளைஞர்கள் முறைகேடாக தங்கி பணியாற்றி வருவதாக, வீரபாண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக திருப்பூரில் தங்கி தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராபின் {ஹசைன் (32) இஸ்ஸாக் அலி (25) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கைது
கைதுகோப்புப்படம்
இரு வங்கதேச இளைஞர்கள் கைது
சென்னை | நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர் என்கவுன்டர் ஏன் - காவல் ஆணையர் அருண் விளக்கம்

விசாரணையில், இருவரும் ஓராண்டாக தங்கி பணியாற்றி வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் வங்கதேச இளைஞர்கள் முறைகேடாக தங்கியுள்ளனரா என பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com