போதைப் பொருட்கள் கடத்திய இளைஞர்
Accusedpt desk

திருப்பத்தூர்: விபத்தில் சிக்கிய காரில் இருந்து 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது!

வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 250 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பொருட்கள்களை பறிமுதல் செய்த போலீசார், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பழுதான சாலையை பராமரிப்பு செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து காரை ஓட்டிவந்த நபர் காரிலிருந்து தப்பியோடியுள்ளார்,

Car
Carpt desk

இந்நிலையில், அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர், காரில் இருந்த தப்பியோடியவரை விரட்டிப் பிடித்து, அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாசாராம் என்பதும், இவர், கர்நாடக மாநிலத்தில் இருந்து கார் மூலம் 25 மூட்டைகளில் 250 கிலோ புகையிலைப் பொருட்களை கடந்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

போதைப் பொருட்கள் கடத்திய இளைஞர்
தருமபுரி: தனியார் பள்ளி தாளாளரை காரில் கடத்திச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர் உட்பட 6 பேர் கைது

இதைத் தொடர்ந்து உடனடியாக 250 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், நாசாராம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com