வாகன சோதனையில் சிக்கிய 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்
வாகன சோதனையில் சிக்கிய 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்pt desk

திருப்பத்தூர் | வாகன சோதனையில் சிக்கிய 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

வாணியம்பாடி அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல். வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது அம்பலூர் காவல்துறையினர் விசாரணை
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடியில் அம்பலூர் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடைச்செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது,

அதனை தொடர்ந்து, காரில் இருந்த நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் சிங் மற்றும் ரமேஷ் குமார் என்பதும், கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னையிற்கு 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தி செல்வதும் தெரியவந்துள்ளது,

வாகன சோதனையில் சிக்கிய 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி - 2 இளைஞர்கள் கைது

இதையடுத்து 500 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த அம்பலூர் காவல்துறையினர், தீலிப்சிங், ரமேஷ்குமாரை ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com