கோடிக்கணக்கில் மோசடி - 2 இளைஞர்கள் கைது
கோடிக்கணக்கில் மோசடி - 2 இளைஞர்கள் கைதுpt desk

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி - 2 இளைஞர்கள் கைது

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி கோடி கணக்கில் மோசடி செய்த வழக்கில் 2 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை அடுத்த மாங்காடு, அடிசன் நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). போறியாளரான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என இணையதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து அதில் கூறிய வங்கிக் கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.1.56 கோடி வரை பணத்தை அனுப்பிள்ளார். இதன் பிறகு பல மாதங்கள் ஆகியும், அவருக்கு இரட்டிப்பு பணம் வராததால், ஏமாற்றப்பட்டதை அறிந்து ஜெயராமன், இது குறித்து ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து மோசடி நபர்களை தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக பாண்டிச்சேரி, சத்யா நகர், மேற்கு குறுக்கு தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (41), சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (29) ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில், இவர்கள் இருவரும் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் சுமார் ரூ 3.5 கோடி வரை பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

கோடிக்கணக்கில் மோசடி - 2 இளைஞர்கள் கைது
தஞ்சாவூர் | "நாம் ஒற்றுமையாக இருந்தால் யார் தயவும் நமக்குத் தேவையில்லை” – ஆர்.எஸ்.பாரதி

இந்நிலையில், இருவரையும் கைது செய்த போலீசார், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். வாட்ஸ் அப் மூலம் குழுக்கள் அமைத்து கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டு வந்த இதுவரை சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..

கோடிக்கணக்கில் மோசடி - 2 இளைஞர்கள் கைது
கோவை | வாட்ஸ் குழுவில் வந்த வர்த்தக பழக்கம்; ஆன்லைன் பணமோசடியில் லட்சங்களை இழந்த நபர்.. 3 பேர் கைது!

இதுபோன்ற மோசடியாளர்களிடம் இருந்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென காவல் ஆணையர் சங்கர் அறிவுறுத்தியுள்ளார். யாரேனும் ஏமாற்றுவது அல்லது ஏமாற்றப்பட்டது தெரிய வந்தால் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையம் அல்லது காவல் ஆணையரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com