திருவாரூர் | திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளம்பெண் புகார் - இளைஞர் கைது
செய்தியாளர்: மாதவன்
திருவாரூர் தண்டலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அம்மையப்பன் தைக்கால் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் மகேஷ்வர் (24) என்பவரை கடந்த மூன்று ஆண்டு காலமாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி இரண்டு மாத கர்ப்பமாக இருந்தேன்.
இதையடுத்து அஸ்வின் மகேஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் நியாயம் கேட்டபோது கர்ப்பத்தை கலைத்து விட்டு வந்தால் மகனை திருமணம் செய்து வைப்பதாக கூறினர். இதை நம்பி கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு அந்தக் குடும்பத்தில் கேட்டபோது திட்டி அனுப்பியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு அஸ்வினை கைது செய்தனர். இதையடுத்து அவரின் குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .