தாத்தா கைதுpt desk
குற்றம்
தி.மலை | சிறுமி மரணத்தில் சந்தேகம்... பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் - தாத்தா கைது
வந்தவாசி அருகே 14 வயது சிறுமியின் சந்தேக மரணத்தால் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாத்தா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
செய்தியாளர்: ஆஜாசெரிப்
வந்தவாசி அருகே ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், சிறுமியின் உடலுக்கு சடங்குகள் செய்து புதைத்து விட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேறகொண்டனர்.
அதில் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் தாத்தா தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியின் தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.