திருவள்ளூர்: தனக்குதானே உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சிக்கொண்ட இளைஞர் மரணம்!

திருவள்ளூரில் தனக்கு தானே உடலில் மின்சாரம் பாய்ச்சி காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துக்கொண்டவர்
தற்கொலை செய்துக்கொண்டவர்PT

திருவள்ளூரில் தனக்கு தானே உடலில் மின்சாரம் பாய்ச்சி காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு அடுத்த ராமதண்டலம் கிராமத்தில் உள்ள ஏரியின் அருகே இளைஞர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட  விசாரணையில் உயிரிழந்த இளைஞர் காஞ்சிபுரம் மாவட்டம் பாக்குப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், பெண் ஒருவருடன்  கடந்த 2 மாதங்களாக ராமதண்டலம் கிராமத்தில், வீடின்றி ஆங்காங்கே வசித்து வந்ததாகவும், அந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரது முதல் கணவருடன் அந்தப் பெண் திரும்பி சென்றதால் மன உளைச்சலுக்கு வெங்கடேசன் ஆளானதாக தெரிகிறது. இதனையடுத்து, ராமதண்டலம் ஏரியின் அருகே அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கின் ஒயரை அறுத்து தனக்கு தானே மின்சாரத்தை பாய்ச்சி கொண்டு அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

PT

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புல்லரம்பாக்கம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com