குற்றவாளிக்கு ஆயுள் தண்டனைpt desk
குற்றம்
திருச்செந்தூர் | போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருச்செந்தூரில் போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம்- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
திருச்செந்தூர் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் திருச்செந்தூர் நடுநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்த அருள் செல்வம் என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குற்றவாளியான அருள் செல்வத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.