ஆசிரியர் போக்சோவில் கைது
ஆசிரியர் போக்சோவில் கைதுpt desk

தென்காசி | பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Published on

செய்தியாளர்: டேவிட்

தென்காசி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவர் பள்ளியில் பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த மாணவிகள் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளனர்.

assam police arrested in bangladeshi terrorist from chennai
கைதுபுதியதலைமுறை

இதையடுத்து ஆசிரியர் டேவிட் மைக்கேல், மருத்துவ விடுப்பில் சென்று தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் டேவிட் மைக்கேல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார், ஆசிரியர் டேவிட் மைக்கேலை தேடி வந்தனர்.

ஆசிரியர் போக்சோவில் கைது
வேலூர் | காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இந்நிலையில் கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com