4 பேர் குண்டர் சட்டத்தில் கைது pt desk
குற்றம்
வேலூர் | காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தெடர்புடைய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
செய்தியாளர்: ச.குமரவேல்
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது கடந்த 03.02.2025 அன்று இரவு இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Arrestedpt desk
இந்நிலையில், இந்த 5 பேரில் முக்கிய நபரான சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன் (38), பரத்ராஜ் (19), விஷால் (19) மற்றும் திலீபன் (27) ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பரிந்துரைத்துள்ளார்.
இதையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.