பழிக்கு பழி..? கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இளைஞரை கூட்டாக கொலை செய்துவிட்டு இன்ஸ்டாவில் பதிவு!

தெலங்கானா மாநிலத்தில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இளைஞரை மர்ம நபர்கள் சேர்ந்து கூட்டாக கொலை செய்து தப்பியோடியுள்ளனர். பழிக்குப்பழியா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை.
கொலை செய்யப்பட்ட நபர்
கொலை செய்யப்பட்ட நபர்புதியதலைமுறை

செய்தியாளர் - தினேஷ் குனகாலா

தெலங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள புச்சிபள்ளி பகுதி பிரகதி நகரை சேர்ந்தவர் தேஜஸ்(26). கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேஜஸ் இரண்டு மாதங்களுக்கு முன் ஜாமினில் விடுதலையாகி இருந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவருடைய வீட்டிற்கு கும்பலாக வந்த சிலர் தேஜசை வீட்டில் இருந்து பலவந்தமாக இழுத்து சென்றனர். அங்கிருந்த குளத்தின் அருகே தேஜசை இழுத்துச்சென்றவர்கள், அவரை 12 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.

கொலை செய்யப்பட்ட நபர்
"அந்த 2 வீரர்களுடன் நான் அறையை பகிர்ந்துகொள்ள மாட்டேன்!" - யாரை சொல்கிறார் ரோகித் சர்மா?

கொலை செய்துவிட்டு தப்பி ஓடியபோது அவர்களில் இரண்டு பேர், கொலை செய்ய பயன்படுத்திய ரத்தகறை படிந்த கத்திகள், ரத்தக்கறை படிந்த தங்களிடைய கைகள் ஆகியவற்றுடன் வீடியோ பதிவு செய்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், கொலை பற்றி பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் அங்கு வந்து சேர்ந்த போலீசார், கொலை செய்யப்பட்ட தேஜஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர்
‘மீண்டும் மோடி வேணும்’- ரத்த காணிக்கை கொடுக்க நினைத்து, தவறுதலாக விரலை வெட்டிக்கொண்ட பாஜக அபிமானி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com