‘மீண்டும் மோடி வேணும்’- ரத்த காணிக்கை கொடுக்க நினைத்து, தவறுதலாக விரலை வெட்டிக்கொண்ட பாஜக அபிமானி!

வேகமாக கையில் கத்தியை வைத்ததில், விரலின் ஒரு பகுதியே வெட்டுப்பட்டுவிட்டது. இருப்பினும், கடவுளுக்கு தன் விரலை காணிக்கையாக கொடுத்ததாக இதை எண்ணிக்கொள்வதாக உள்ளூர் ஊடகங்களிடம் பேசியிருக்கிறார் அந்த நபர்.
பாஜக பிரமுகரின் முகம்சுளிக்க வைக்கும் செயல்
பாஜக பிரமுகரின் முகம்சுளிக்க வைக்கும் செயல்புதிய தலைமுறை

கர்நாடகாவின் உத்தர கன்ண்டனா பகுதியை சேர்ந்த ஒருவர், நடக்கவுள்ள மக்களவை தேர்தல் முடிவில் மீண்டும் பிரதமராக பிரதமர் மோடியே தேர்ந்தெடுக்கபப்ட வேண்டும் என வேண்டிக்கொண்டு காளி தெய்வத்துக்கு ரத்தக் காணிக்கை அளிக்க நினைத்துள்ளார். அப்போது தவறுதலாக அவர் விரலையே வெட்டிக்கொண்டார்.

இதற்காக தன் ஆள்காட்டி விரலை அவர் கத்தி மூலம் கீற நினைத்துள்ளார். அதில் கிடைக்கும் ரத்தத்தை சேமித்து, பிரார்த்தனை செய்ய நினைத்துள்ளார்.

பாஜக ஆதரவாளரான அருண் வெர்னேகர் என்ற அந்த நபர், தன் வீட்டிலேயே மோடிக்கு சின்னதாக கோயிலொன்று கட்டியுள்ளார். அதில் தினமும் மோடிக்கு பிரார்த்தனையும் செய்துவருகிறாராம். அந்த கோயிலில்(!)தான் இந்த காணிக்கையையும் அளித்துள்ளார் அவர்.

அருண் வெர்னேகர்
அருண் வெர்னேகர்

ஆனால் வேகமாக கையில் கத்தியை வைத்ததில், ஆள்காட்டி விரலின் முன்பகுதி முழுவதுமே வெட்டுப்பட்டுவிட்டது. இருப்பினும், கடவுளுக்கு தன் விரலை காணிக்கையாக கொடுத்ததாக இதை எண்ணிக்கொள்வதாக உள்ளூர் ஊடகங்களிடம் பேசியிருக்கிறார் அந்த நபர்.

மட்டுமன்றி கைகளை வெட்டியபோது கொட்டிய ரத்தத்தை சிறிய பாத்திரத்தில் சேமித்து, “மா காளி... எங்கள் மோடியை காப்பாற்றுங்கள்” என்று எழுதியுள்ளார்.

இந்நிலையில், தகவலறிந்து பாதிக்கப்பட்ட அருணின் குடும்பத்தினர் அவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள், “அந்த விரல் பகுதியை மீண்டும் ஒட்டவைக்க முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் விரல் வெட்டுப்பட்ட நிலையில் அவதிப்படுகிறார் அருண். விரலையே நீக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக தான் ரத்தம் சிந்தி பிரார்த்தனை செய்வதை வீடியோவாக பதிவுசெய்ய அவரேவும் ஏற்பாடு செய்திருந்தார். அந்த வீடியோவில் இந்த காட்சிகள் அனைத்தும் அப்படியே பதிவாகியுள்ளது. தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை வாசிக்கும் யாரும், இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com