பாகிஸ்தானில் வீட்டை விட்டு ஓடிய இளம் காதலர்களை பஞ்சாயத்து தீர்ப்பின்படி கவுரவக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணும், 17 வயது சிறுவனும் காதலித்து வந்தனர். வீட்டில் காதலை ஏற்கமாட்டார்கள் என்பதால் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். பின்னர் அவர்களை பிடித்து வந்த உறவினர்கள், தங்கள் சமூகத்துக்கு இருவரும் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக நினைத்தனர். பின்னர் பழங்குடி பஞ்சாயத்து அமைப்பான பஷ்துன் தலைவர்கள், அவர்களை கவுரவக் கொலை செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து காதலர்களில் பெண்ணை முதலில் கயிறால் கட்டி மின்சாரத்தை பாய்ச்சி கொன்று புதைத்தனர். மறுநாள் காதலனை அதே போல கயிறால் கட்டி மின்சாரத்தைப் பாய்த்து கொன்றனர். பின்னர் அவரையும் புதைத்துள்ளனர். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு வருடமும் 500க்கும் மேற்பட்டோர் இது போன்று பழங்குடி பஞ்சாயத்து அமைப்பால் கவுரவக் கொலை செய்யப்படுகின்றனர். இதில் அதிகமானோர் பெண்கள் என்று கூறப்படுகிறது.