மகாராஷ்டிரா| பள்ளி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்... கைதான பள்ளியின் காவலாளி!
பிரேம் குமார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் அப்பள்ளியில் காவலாளி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு, இதே மஹாராஸ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 4 வயதுடைய இரு பெண் குழந்தைகளை பள்ளியில் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் போராட்டங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின் அதிர்வுகள் ஓய்வதிற்குள் மற்றொரு கொடூர சம்பவம் இங்கேயே நடந்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது தனியார் பள்ளி ஒன்று. இங்கு 17 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட புகாரில், அப்பள்ளியின் காவலாளி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜுலை 15 முதல் 20 வரை இந்த சம்பவம், பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புகாரின் அடிப்படையில், அப்பள்ளியின் 53 வயதான காவலாளி ரேமண்ட் வில்சன் டயஸ் சனிக்கிழமை மாலையன்று (26.7.2025) அன்று காவலர்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த கொடூர சம்பவம் பள்ளியின் கேண்டீனில் நடந்ததாக பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளி நிர்வாகத்திடமிருந்து பெற்றக்கொண்ட புகாரின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட காவலாளி ரேமண்ட் வில்சன் டயஸ் மீது பிஎன்எஸ் பிரிவு 75 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 5, 8 மற்றும் 12 இன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அர்னாலா காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த ஜூலை 18 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஒரு சிறிய கிராமத்தில் வசித்துவரும் 15 வயது சிறுவனை இரண்டு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறப்படும் அதேவேளையில் ஆண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்க்கொண்டு இருப்பதை இது போன்ற சம்பவங்கள் மெய்பித்து காட்டுகின்றனர்.