பாலியல் தொல்லை தருவதாக பள்ளி மாணவி புகார்: 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது

பாலியல் தொல்லை தருவதாக பள்ளி மாணவி புகார்: 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது
பாலியல் தொல்லை தருவதாக பள்ளி மாணவி புகார்: 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது

பாலியல் தொல்லை தருவதாக பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவிக்கு அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் மத்திய அமைச்சகத்தின் சைல்டு லைன் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் நல குழு மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் கோவை சித்ரா பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவகர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து. இருவரையும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com