சேலம்: சிறுமியை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

சேலம்: சிறுமியை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது
சேலம்: சிறுமியை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

காடையாம்பட்டி அருகே 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள கொங்குப்பட்டி ஊராட்சியில் நல்லூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான சுரேஷ் என்ற இளைஞர் மரம் வெட்டும் கூலிவேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ், 17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி தன்னுடன் பேச வேண்டும், தன்னை காதலிக்க வேண்டும், தன்னை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறி தினமும் தொந்தரவு செய்ததோடு, பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்து தீவட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாவதி, புகார் மீது நடவடிக்கை எடுக்க, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தார்.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்துவந்த இளைஞர் மீது, சிறுமி வன்கொடுமை சட்டம், சிறுமியின் படத்தை தவறாக சித்தரிப்பது, போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com