இரும்பு கழிவு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி - பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் இரும்பு கழிவு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வானகரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். தனியார் தொழிற்சாலைகளில் இருந்து இரும்பு கழிவு பொருட்களை மொத்தமாக எடுத்து விற்பனை செய்து வரும் இவருக்கு மறைமலைநகரைச் சேர்ந்த சுகுமாறன் (33) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், சுகுமாறன் தனது நண்பரான காட்ரம்பாக்கம் ஜானகிராமன் (50) எனபவர் பலருக்கு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து இரும்பு கழிவு எடுத்துக் கொடுத்து கோடீஸ்வரர் ஆக்கியுள்ளார் என்றும், தாங்களும் நம்பினால் தங்களையும் கோடீஸ்வரர் ஆக்கிவிடுவார் என ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.

arrest
arrestpt desk

இதனை நம்பிய வினோத் குமார் ரூ.25 லட்சம் பணத்தை ஜானகிராம் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், ஒரு மாதம், இரண்டு மாதம் என மாதக்கணக்கில் இருவரும் வினோத் குமாரை ஏமாற்றி வந்தனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த. வினோத் குமார், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

accused
ஒசூர்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 சவரன் தங்கச் செயின் பறிப்பு; 2 பேர் கைது

கைது செய்யப்பட்ட சுகுமார் பிரபல ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி என கூறப்படுகின்றது. சுகுமார் மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேபோல் ஜானகிராமன் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக ஒபிசி அணி பொதுச் செயலாளராக உள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com