செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓட்டம் - விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் கொள்ளையர்கள்

செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓட்டம் - விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் கொள்ளையர்கள்
செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓட்டம் - விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் கொள்ளையர்கள்

செல்போன் பறித்துவிட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்கள் பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி அடுத்த கைவேலி மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் மோகன்(33), என்பவர் பணி நிமித்தமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 

செல்போனை பறிகொடுத்த நபர் செல்போன் பறிப்பு ஆசாமிகளை விரட்டி செல்ல ஆரம்பித்தார். அவர்கள் வேளச்சேரி 100 அடி சாலை அருகே சென்ற போது, அங்கு இருசக்கர வாகனத்தோடு, சாலையை கடக்க முயன்ற ஷாலினி(29), என்ற பெண்ணின் மீது மோதியதில் அப்பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் செயின் பறிப்பு ஆசாமிகள் இருவரும் சாலையின் தடுப்பில் மோதி கீழே விழுந்தனர். இதில் முகம், கை உள்ளிட்ட இடங்களில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

விசாரணையில் இருவரும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த பிரதீப்(எ)பிரிதிவிராஜ்(24), பாலாஜி(எ)கருப்பு பாலாஜி(19), என்பதும், இதில் பாலாஜி என்பவர் மீது மட்டும் திருவேற்காடு, ஆரம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா, அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த வேளச்சேரி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com