ராணிப்பேட்டை | வீடு புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவி குத்திக் கொலை - சோளிங்கர் அருகே பகீர் சம்பவம்
செய்தியாளர்: நாராயணசாமி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட வாரச் சந்தை பின்புறம் உள்ள வீட்டில் ஜனனி (15) என்ற 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். லக்ஷயா (16) என்ற 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வெட்டுக் காயத்துடன் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திடீரென வீட்டினுள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், மாணவிகள் இருவரையும் கத்தியால் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த மர்ம நபர்களை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து சோளிங்கர் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட ஜனனி என்ற மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.