புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைதுpt desk
குற்றம்
மயிலாடுதுறை | இருசக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது
மயிலாடுதுறை அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரக எல்லைக்குட்பட்ட நத்தம் பெட்ரோல் பங்க் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டைகளுடன் வந்த இரண்டு நபர்களை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது ஐந்து சாக்கு மூட்டைகளில் 45 கிலோ எடை கொண்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
Arrestedpt desk
இதனையடுத்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ், குமரகுரு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.