அதிமுக பிரமுகர் கைது
அதிமுக பிரமுகர் கைதுpt desk

மயிலாடுதுறை | மேக்கப் போடவேண்டும் என்று அழைத்துச் சென்று பாலியல் தொல்லை - அதிமுக பிரமுகர் கைது

மயிலாடுதுறை அருகே அழகு நிலைய பெண்ணை மேக்கப் போடவேண்டும் என்று அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே மேலபாதி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கீழையூர் சத்திரம் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். மேலப்பாதி மேல தெருவைச் சேர்ந்தவர் தினகரன் (28) அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியான இவர், குழந்தைகள் பிறந்தநாளுக்கு மேக்கப் போட வேண்டும் எனக் கூறி அழகு கலை நிபுணரை அழைத்துச் சென்றுள்ளார்.

அதிமுக பிரமுகர் கைது
சேலம் | உறவினர் வீட்டில் 6 சவரன் நகையை திருடிய நபர் உட்பட 3 பேர் கைது

இந்நிலையில், அழகு கலை நிபுணரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். உடனே அவரை தள்ளி விட்டு விட்டு கூச்சலிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் வழக்குப் பதிவு செய்து அதிமுக நிர்வாகி தினகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com