3 பேர் கைது
3 பேர் கைதுpt desk

சேலம் | உறவினர் வீட்டில் 6 சவரன் நகையை திருடிய நபர் உட்பட 3 பேர் கைது

கெங்கவல்லி அருகே உறவினர் வீட்டில் நகையை திருடி அடகு வைத்த மூன்று பேரை போலீசார் கைது; செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயவேல். இவரது மனைவி சந்திரா ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர்களது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கூரையின் ஓட்டை பிரித்து வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து ஆறு பவுன் நகையை திருடிச் சென்றனர்.

arrested
arrestedpt desk
3 பேர் கைது
அமைச்சர் பொன்முடி விவகாரம் | தாமாக முன்வந்து வழக்கை நடத்த நீதிபதி உத்தரவு!

இது குறித்து தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சந்திரா தங்கையின் பேரன் தயாநிதி (22), அவரது நண்பர் மணிகண்டன் (27), தாண்டவராயபுரம் சதீஷ் (25) ஆகியோர் நகையை திருடி அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து கெங்கவல்லி போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com