மதுரை | அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.33 லட்சம் மோசடி - இருவர் கைது
செய்தியாளர்: மணிகண்டபிரபு.
மதுரை மேலூர் அழகாபுரி கிராமத்தில் வசிக்கும் அடைக்கலராஜ் என்பவர் தனக்கும் தனது மனைவி மற்றும் உறவினருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20,33,500ஃ- பணத்தை மதுரை வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியைச் சேர்ந்த குமரகுரு (30) என்பரிடம் கொடுத்துள்ளார். இதையடுத் பணத்தை பெற்றுக் கொண்டஅவர், போலி நியமன ஆணை மற்றும் அடையாள அட்டைகளை கொடுத்து ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் மதுரை மாநகர மத்திய குற்ற பிரிவு காவல் துறையினரால் வழக்குப்பதிவு செய்து விசாரணை Nமுற்கொண்டனர். விசாரணையில் குமரகுரு, மோசடிக்கு உதவியாக இருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரியும் முன்னமலை (45) ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், அவர்களிடமிருந்து போலி பணி நியமன ஆணை மற்றும் போலி அடையாள அட்டைகளை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.