டேட்டாவை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்கள்.. எரிக்சன் ஆய்வில் தகவல்!
உலகிலேயே அதிகளவு இணைய டேட்டாவை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறை வேகமாக வளர்ந்து வருவதோடு புதிய தொழில்நுட்பத்திற்கும் வாடிக்கையாளர்கள் விரைவாக மாறி வருகின்றனர். அந்தவகையில், தற்போது 5ஜி சந்தாதாரர்கள் 29 கோடியாக உள்ளதாகவும், இது மொத்த மொபைல் சந்தாதாரர்களில் 24 சதவீதம் எனவும் எரிக்சன் ஆய்வு கூறியுள்ளது.
வரும், 2030ஆம் ஆண்டுக்குள் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக அதிகரித்து 98 கோடியாக உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அடுத்த 5 ஆண்டுகளில் 4ஜி பயனர்கள் 60 சதவீதம் குறைந்து 23 கோடியாக இருப்பார்கள் எனவும் கணித்துள்ளது. தற்போது இந்தியாவில் ஒரு பயனர் மாதத்திற்கு சராசரியாக 32 ஜிபி டேட்டா பயன்படுத்துவதாகவும், இது உலகிலேயே மிகவும் அதிகம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த அளவு 2030க்குள் 62 ஜிபியாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.