70 சவரன் நகைகள் மாயம் - துணை மேலாளர் கைதுpt desk
குற்றம்
மதுரை | வங்கியில் அடகு வைத்த 70 சவரன் நகைகள் மாயம் - ஆய்வின் போது அதிர்ச்சி!
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் வங்கியில் அடகு வைத்த 70 பவுன் நகைகள் மாயமான நிலையில், வங்கி துணை மேலாலரை கைது செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: பிரேம்குமார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா காடுபட்டி காவல் நிலைய சரகம் மன்னாடிமங்கலம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கிளை மேலாலராக ஸ்ரீராம் என்பவரும் துணை மேலாளராக கணேசன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
கைதுகோப்புப்படம்
இந்நிலையில், கடந்த 14.11.2024-ம் தேதி பேங்க் ஆப் பரோடா வங்கியில் பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான் என்பவரின் உத்தரவுபடி ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 2023 முதல் 2024 வரை அடகு வைத்த 9 நபர்களின் 561.5 கிராம் நகைகள் வங்கி லாக்கரில் இல்லை. ஆனால், அடகு வைத்ததற்கான வரவு வங்கி பதிவேட்டில் மட்டும் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்படி பேங்க் ஆப் பரோடா பிராந்திய மேலாளர் ஜெய் கிசான், 16.2.2025 ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் காடுபட்டி போலீசார், வங்கியின் துணை மேலாளர் கணேஷ் கைது செய்துள்ளனர்.