ரூ.51 லட்சம் மோசடி - பஞ்சாயத்து யூனியன் உதவி இயக்குநர் கைது
ரூ.51 லட்சம் மோசடி - பஞ்சாயத்து யூனியன் உதவி இயக்குநர் கைதுpt desk

நீலகிரி | அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.51 லட்சம் மோசடி - பஞ்சாயத்து யூனியன் உதவி இயக்குநர் கைது

உதகையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.51 லட்சம் வரை மோசடி செய்ததாக கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலக உதவி இயக்குநரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: ஜான்சன்

கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணிபரிந்து வருபவர் கோத்தகிரி ஒரசோலை பகுதியைச் சேர்ந்த மனோ. இவர், 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.51 லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு போலியான பணி ஆணைகளை வழங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியர் லட்சுமி பவ்யாவிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா நடவடிக்கை எடுத்து உதவி பஞ்சாயத்து யூனியன் உதவி இயக்குநர் மனோ என்பவரை கைது செய்துள்ளனர்.

ரூ.51 லட்சம் மோசடி - பஞ்சாயத்து யூனியன் உதவி இயக்குநர் கைது
சேலம் | குடும்பத் தகராறில் மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொன்ற கணவர் - 3 பேர் கைது

இதைத் தொடர்ந்து குற்றப் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து மனோவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com