சிறுமி வரைபடம்
சிறுமி வரைபடம்PT

தொடர்ந்து சிதைக்கப்படும் பிஞ்சுகள்; புதுச்சேரியை தொடர்ந்து ம.பி-யில் நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்!

பாண்டிச்சேரியில் 9 வயது குழந்தை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, போபாலில் ஏழுவயது சிறுமி பாலியல் வண்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது

என்ன நடக்குது இங்க.... தொடர்ந்து பெண் குழந்தைகள் அடுத்தடுத்து பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாக்கப்பட்டு அடுத்தடுத்து இறப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் பாண்டிச்சேரியில் 9 வயது குழந்தை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்திகள் முடிவுக்கு வருவதற்குள்ளாக போபாலில் ஏழுவயது சிறுமி பாலியல் வண்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் ஜுன்னார்தேவ் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு 7 வயதில் பெண்குழந்தை இருந்தது. குழந்தையின் தாயார், கரும்பு தோட்டத்தில் கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்தவாரம், பெண்ணின் அண்ணன் மகனான சோனுப்ந்த்ரம் என்ற 17வயது நிரம்பியவர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.

சிறுமி வரைபடம்
புதுச்சேரியில் சிறுமி கொடூரமாக கொலை; வலுக்கும் மக்கள் போராட்டங்கள் - அரசியல் கட்சி தலைவர்கள் ஆதங்கம்

இந்நிலையில் அப்பெண் தோட்டத்தில் கரும்பு அறுவடை செய்வதற்காக தனது பெண்குழந்தையையும், சோனுவையும் வீட்டில் விட்டு சென்று இருக்கிறார்.

இச்சமயத்தை பயன்படுத்திக்கொண்ட சோனு, குழந்தையை பாலியல் துன்புறுத்துதலுக்கு முற்பட்டிருக்கிறார். இதில் குழந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரம் கொண்ட சோனு, குழந்தையின் கழுத்தை நெரித்தும், கோடாரியால் வெட்டியும் குழந்தையை கொன்றதுடன், உடலை அங்கிருந்த மரகுவியலுக்கிடையில் மறைத்தும் வைத்துள்ளார்.

இதற்கிடையே வீடுதிரும்பிய பெண் தன்குழந்தை காணாததால், உள்ளூர் மக்கள் உதவியுடன் போலிசாரிடம் தகவல் தெரிவித்தனர். நிலைமையின் தீவிரத்தை தெரிந்துக்கொண்ட சோனு, அன்றிரவு மரகுவியலுக்கிடையில் மறைத்து வைத்திருந்த குழந்தையின் உடலை எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் இடுகாட்டில் புதைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

குழந்தையின் தாயாருக்கு தலைமறைவாகிய சோனுவின் மீது சந்தேகம் வந்ததால், போலிசாரிடம் சோனுவைப்பற்றி கூறியிருக்கிறார். சோனுவின் நடவடிக்கைகளை போலிசார் கண்காணித்து அவரை கைது செய்து விசாரித்ததில், குற்றத்தை ஒப்புக்கொண்டு, சிறுமியை புதைத்த இடத்தையும் காட்டி இருக்கிறார். உடனடியாக சோனு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தற்பொழுது நாட்டையே உலுக்கிவருகிறது.

இவரைப்போன்ற குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனையால் மீண்டும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடக்காதவாறு சட்டத்தில் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com