விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட காஞ்சிபுரம் இளைஞர் பலியான விவகாரம்: தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்!

நீண்ட போராட்டத்திற்கு பிறகு சீனிவாசனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் சீனிவாசனின் உடலானது காஞ்சிபுரம் குண்டுகுளம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
சீனிவாசன்
சீனிவாசன்pt web

காஞ்சிபுரத்தை அடுத்த குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் சீனிவாசன். 27 வயதான இவர் காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த புதன்கிழமை இரவு கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் 10-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். வழியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சீனிவாசனை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அதிகளவு மதுபாட்டில்கள் அவரிடம் இருந்ததை விசாரணை செய்துள்ளனர். அப்போது சீனிவாசனின் தந்தை லோகநாதன் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்பவர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தலைமைக் காவலர் மகேஷ், சீனிவாசனை அவரது வாகனத்திலேயே திருவீதிபள்ளம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையம் அழைத்துச் சென்றிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சீனிவாசன் தப்ப முயன்ற போது தொழிற்சாலை வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையெடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே உயிரிழந்த சீனிவாசன், தொலைபேசி மூலம் தனது தம்பிக்கு அழைத்து விவரத்தை கூறியதும் குறிப்பிடத்தக்கது.

தகவலறிந்ததும் சீனிவாசனின் குடும்பத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மக்கள் மன்ற நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வாசலில் குவிந்தனர். உயிரிழந்த சீனிவாசனின் உயிரிழப்பிற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படும் என உறுயளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சீனிவாசன்
காஞ்சிபுரம்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் பலி!

இதனைத் தொடர்ந்து சீனிவாசனின் உடலானது, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீதிபதியின் தலைமையில் மருத்துவக்குழுவின் மூலம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின் நீண்ட போராட்டத்தின் பிறகு சீனிவாசனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் சீனிவாசனின் உடலானது காஞ்சிபுரம் குண்டுகுளம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையில் சீனிவாசனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தலைமைக் காவலர் ரமேஷ் கவனக்குறைவாக அழைத்துச் சென்றதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஏதும் அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு காஞ்சிபுரம் மட்டுமின்றி கடலூர் போன்ற மாவட்டங்களிலிருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு குண்டுகுளம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com