“விஷ்வாவ துப்பாக்கி எடுத்து போட்றவா..” - என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடியை ஏற்கெனவே மிரட்டிய போலீஸ்?

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி விஷ்வா தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்தவர் ரவுடி விஷ்வா. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், தலைமறைவாக இருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி பகுதியில் விஷ்வாவை போலீஸார் மடக்கி பிடிக்க முயன்றபோது, மறைத்துவைத்திருந்த கத்தியால் போலீஸாரை விஷ்வா தாக்கியதாகவும், இதனால் போலீஸார் பாதுகாப்பிற்காக விஷ்வாவை சுட்டதாகவும் சொல்லப்பட்டது. இதில் விஷ்வா உயிரிழந்தார்.

rowdy vishwa
rowdy vishwapt desk

இந்நிலையில், என்கவுண்டருக்கு முன்பு காவல்நிலையத்துக்கு சென்ற விஷ்வாவின் வீடியோ வைரலாகியுள்ளது. அதில் காவலர் ஒருவர் மற்றொரு காவலருடன் தொலைபேசியில் பேசுகிறார்.

vishwa
நேற்று மாலை கொல்லப்பட்ட ரவுடி, என்கவுண்ட்டர் தொடர்பாக முன்கூட்டியே புகார்? நடந்தது என்ன?

அந்த வீடியோவில், “துப்பாக்கி எடுத்து விஷ்வாவை சுட்டுவிடவா, மக்களுக்கு பதில் சொல்ல முடியல” என்று டென்ஷனாக பேசுகிறார். அதை பார்த்த விஷ்வா மரண பயத்தில் நின்றுகொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் அந்த வீடியோவை காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com